Monday, April 27, 2026 1:18 pm
லக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரணமுரேகம பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26.04.2026) ஏணியிலிருந்து தவறிவிழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் அனநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.குறித்த பெண் லக்கலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் ஏணியொன்றின் உதவியுடன் வீட்டின் கூரை மீது ஏற முயற்சித்த போது, எதிர்பாராத விதமாக கீழே விழுந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

