Monday, April 27, 2026 2:04 pm
இலங்கை போக்குவரத்து சபை பேருந்து மற்றும் தனியார் பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தம்புள்ளை – மாத்தளை பிரதான வீதியின் நாவுல, நாலந்த பகுதியில் இன்று திங்கட்கிழமை (26.04.2026) காலை இடம்பெற்றுள்ளது.
விபத்தில் 11 பேர் காயமடைந்த நிலையில் நாலந்த பிரதேச வைத்தியசாலை மற்றும் மாத்தளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாகத் தனியார் பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கை போக்குவரத்துச் சபைப் பேருந்தின் சாரதி தப்பியோடியுள்ளார். விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை நாவுல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

