Tuesday, June 23, 2026 1:39 pm
கிளிநொச்சியில் நேற்று இரவு (23) இடம்பெற்ற விபத்தில் ஓய்வு நிலை அதிபர் பலியாகியுள்ளார். குறித்த விபத்து நேற்று இரவு 7.30 மணியளவில் A9 வீதியில் இடம்பெற்றுள்ளது.
வழமையான தனது நடை பயிற்சியினை முடித்து திரும்புகின்ற போது பெரிய மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்த இளைஞர்கள் கிளிநொச்சி பொலீஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள பாதசாரிகள் கடவையில் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் ஓய்வு பெற்ற அதிபர் பெருமாள் கணேசன் என்ற நபர் படுகாயம் அடைந்த நிலையில் இராணுவத்தினரின் நோயாளர் காவுவண்டி மூலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் அதி தீவிர (ICU) பிரிவில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
சமீப நாட்களாக கிளிநொச்சி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக பயணிக்கும் இளைஞர்களால் பல விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

