Monday, April 27, 2026 10:58 am
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், இளவாலை – பெரியவிளான் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பிலேயே இந்த கைது இன்று இடம்பெற்றுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் துப்பாக்கியைக் கையில் ஏந்தியவாறு பெண்களுடன் முரண்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

