Friday, July 31, 2026 11:31 am
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மீதான வன்முறை தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி யாழ் மாவட்ட செயலகம் முன்பாக இன்றைய தினம் ஊடகவியலாளர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, யாழ் மாவட்ட செயலகத்தில் ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கில் கலந்து கொள்ளவிருந்தார்.
இந் நிலையிலையே நீதியான விசாரணைகளை முன்னெடுக்கப்பட வேண்டும் என கோரி, ஊடக பிரதி அமைச்சரின் நிகழ்வினை யாழ் ஊடக அமையத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள் புறக்கணித்ததை தொடர்ந்தே இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிட்த்தக்கது.

