Monday, June 8, 2026 10:18 am
பெண்களுடன் கலந்துரையாடலை மேற்கொள்வதாக ஒழுங்கு செய்யப்பட்ட குறித்த நிகழ்வில்பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் , கடல் தொழில் அமைச்சர் , பாராளுமன்ற உறுப்பினர் , மாநகர சபை உறுப்பினர் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் என அனைவரும் நீண்ட நேரம் உரையாற்றினர் இதன் போது பெண்கள் தொடர்பான பல்வேறு ஒழுக்க விழுமியங்கள் பெண்கள் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் பேசப்பட்டன.
இவ்வாறு பேசப்பட்டு நிகழ்வு நிறைவடைவதற்காக நன்றி உரை இடம் பெற்றுக் கொண்டிருந்த வேளை பெண்களுடன் கலந்துரையாடல் என்று விட்டு நீங்கள் எல்லோரும் பேசிவிட்டுச் செல்லுகிறீர்கள் எங்களுடைய பிரச்சனைகள் ஏதாவது கேட்டீர்களா என சங்கானை பிரதேச சபை எல்லைக்குள் வசிக்கும் பெண் ஒருவர் தனக்கு அரசாங்கத்தினாலும் அரசு ஊழியர்களாலும் எவ்வித சேவைகளும் கிடைக்கவில்லை தான் புறக்கணிக்கப்படுவதாகவும், ஒரு நாய்கள் காப்பகம் ஒன்றை நடத்தி வருவதாகவும் , அதற்கான அனுமதி கோரிய போது பிரதேச சபை அதற்கு அனுமதி மறுத்ததாகவும் , தான் மலசலகூடமின்றி வாழ்ந்து வருவதாகவும், அதனை கட்டுவதற்கு அனுமதியினை பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதாகவும், அரசாங்கம் தனக்கு அநீதி இழைப்பதாகவும் தெரிவித்தார்.
தான் வேறு பிரதேசத்திலிருந்து இந்த நிகழ்வினை அறிந்து விளம்பரங்களை பார்த்து கணவனிடம் அனுமதி கோரி இந் நிகழ்வுக்கு பெண் அமைச்சர் என்ற காரணத்தால் வந்ததாகவும் தனக்கு இழைக்கப்படும் அநீதிக்கு நீதி கேட்டு குறித்த கூட்டத்திற்கு வந்ததாக குறிப்பிட்டுள்ளார். இதனால் அங்கிருந்த தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கும் பெண்ணுக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டது அடுத்த நிகழ்விற்குச் செல்ல தயாரான அமைச்சர் பெண்ணிடம் வந்து அவரது பிரச்சனை தொடர்பில் வினாவினர் அது தொடர்பான எழுத்து மூலம் விடயங்களை சமர்ப்பிக்கும்மாறும் , பிரச்சினைகள் தொடர்பில் தான் ஆராய்ந்து தீர்வினை வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் பவானந்த ராஜாவை சந்தித்துக் கொள்ளுமாறும் அமைச்சர் கூறி இருந்தார்.
இருப்பினும் அரசாங்கத்தாலும் அரசு அதிகாரிகளாலும் தொடர்ந்தும் தான் புறந்தள்ளப்படுவதாக குறித்த பெண் குறைபட்டுக் கொண்டார்.

