Tuesday, May 19, 2026 4:02 pm
ஒட்டுமொத்த இலங்கையையும் தமிழகத்திற்கு வழங்குமாறு யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு எங்களுடைய தமிழீழ தேசத்தை அங்கீகரிக்கிறது. தமிழக மண்ணில் கால் பதிக்கும் போதுதான் இன்னொரு அந்நிய நாட்டுக்கு வந்திருக்கிறோம் என்ற உணர்வே எங்களுக்கு ஏற்படுவதில்லை எனத் தெரிவித்ததோடு முன்னர் நான் யாழ்ப்பாணத்தையும், மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு வழங்குமாறு கூறினேன். ஆனால் இப்போது ஒட்டுமொத்த இலங்கையையுமே தமிழகத்திற்கு கொடுக்குமாறு கூறுகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இங்கு தமிழன் அடக்கப்படுகின்றான். ஊழல் நிறைந்துள்ளது அப்பாவி சிங்கள மக்களை நான் எதிர்ப்பவன் அல்ல .சிங்கள மக்களோடு இணைந்து வாழ்வதையே விரும்புவதாக என்றும் தெரிவித்த அவர் 2009 மே 18 இல் தமிழினப் படுகொலையை நிகழ்த்திய சிங்கள இனவாத அடக்குமுறை அரசை மட்டுமே எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் மற்றும் சிங்களப் பிரதிநிதிகளுக்கு இடையே நாடாளுமன்றத்தில் வேற்றுமைகள் இல்லாத போதும் சுயநல அரசியல்வாதிகளின் கீழ்த்தரமான அரசியலால் தான் சாதாரண மக்கள் வீதிகளில் அடிபடும் நிலை உருவாகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆயிரக்கணக்கான இசைப்பிரியாக்கள் புதைக்கப்பட்ட தமிழர்களின் வலிகள் நிறைந்த மண்ணில் இன்று பௌத்த விகாரைகள் கட்டப்பட்டு வருவதாகக் கவலை வெளியிட்ட அவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை நோக்கிப் பயன்படுத்திய அவதூறு வார்த்தைகளுக்குக் கடுமையான கண்டனங்களையும் பதிவுசெய்துள்ளார்.

