Wednesday, June 3, 2026 2:01 pm
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
2019 இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான தொடர் விசாரணைகளின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறு நீதிமன்றப் பதிவாளருக்கு கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேன உத்தரவிட்டார்.
இலங்கை அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மற்றும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே சம்பந்தப்பட்ட வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

