Thursday, July 23, 2026 4:27 pm
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு வருகை தந்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக தாம் கைது செய்யப்படுவதையும், தடுத்து வைக்கப்படுவதையும் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி மனு ஒன்றினை கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரிட் மனு மீதான மேலதிக பரிசீலனை இன்று இடம்பெறவுள்ளநிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த மனு விசாரணைக்காக மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.
கடந்த 9 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதியரசர் ரொஹாந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் நான்காவது நாளாகவும் பரிசீலிக்கப்பட்ட இந்த மனு தொடர்பான மேலதிக பரிசீலனை இன்று வரையில் ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

