Friday, September 25, 2026 6:24 pm
லங்கா மினரல் சாண்ட்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் உதேனி ஜயரத்ன தசநாயக்க, இன்று வெள்ளிக்கிழமை(25) காலை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2023 , 2024 ஆம் ஆண்டுகளில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை மீறியும், உரிய ஆட்சேர்ப்பு நடைமுறைகளைப் பின்பற்றாமலும் தற்காலிக ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்களுக்கு சம்பளமாக 34,438,650.42 ரூபாய் செலுத்தப்பட்டதன் மூலம் முறையற்ற அனுகூலம் வழங்கப்பட்டதாக ஆணைக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.
கைது செய்யப்பட்ட முன்னாள் தலைவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

