Tuesday, April 28, 2026 10:31 am
அநுராதபுரம் – எட்டவீரகொல்லேவ, கோங்கொல்லேவ பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, கைக்குண்டு மற்றும் தோட்டாட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அட்டவீரகொல்லேவ பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய இப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது சந்தேகநபரிடமிருந்து 01 கைக்குண்டு, 52 ரி -56 ரகத் தோட்டாக்கள், 30 – 9MM ரகத் தோட்டாக்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்தநபர் அட்டவீரகொல்லேவ பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் அட்டவீரகொல்லேவ பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

