Wednesday, April 22, 2026 1:01 pm
கொழும்புஇ கல்கிஸை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றை மோதிவிட்டுத் தப்பிய முச்சக்கர வண்டி சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பரவிய வீடியோ காட்சிகள் மற்றும் CCTV பதிவுகளின் உதவியுடன் சந்தேக நபர் நேற்றய தினம் செவ்வாய்க்கிழமை (21.04.2026) கைது செய்யப்பட்டார்.
ஏப்ரல் 14 அன்றுஇ குறித்த முச்சக்கர வண்டிஇ ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் தொடர்ந்து சென்றுள்ளதை தொடர்ந்து இச் சம்பவத்தின் காணொளி இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டது.
இந்த விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதியிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களைத் தொடர்ந்து, விரிவான விசாரணை தொடங்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்இ இரத்மலானை போருபானாவைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஆவார்.
குறித்த நபரை இன்று புதன்கிழமை (22.04.2026) கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து கல்கிஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

