Friday, April 24, 2026 12:13 pm
ஐபிஎல் 2026 கிரிகெட் போட்டியின் நேற்றைய தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மோதியது. இதில் 103 ஓட்டங்களால் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியானது மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
முதலில் துடுப்பாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 207 ஓட்டங்களை பெற்றது.
208 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 19 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 104 ஓட்டங்களை மாத்திரமே பெற்று படுதோல்வியை தழுவியது.
சென்னை அணியின் தொடக்க வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் அதிரடியாகத் தொடங்கினர்கள். ருதுராஜ் கெய்க்வாட் 22 ரன்களில் வெளியேற சஞ்சு சாம்சன் 54 பந்துகளில் 10 பவுண்டரிகள் 8 சிக்ஸர் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 101 ரன்கள் குவித்து இந்தத் தொடரின் தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்தார்.
டெவால்ட் பிரெவிஸ் மற்றும் ஷிவம் துபே ஆகியோர் ஒத்துழைப்பு அளிக்க சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது.
மும்பை தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 1 விக்கெட் வீழ்த்தினார். 208 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களம் நுழைந்த மும்பை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது.
பவர்பிளே முடிவில் அந்த அணி 29 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. சென்னையின் சுழற்பந்து வீச்சாளர் அகீல் ஹொசைன் தனது அசத்தல் பந்துவீச்சால் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி மும்பையின் வெற்றி கனவைத் தகர்த்தார்.
நூர் அகமது மற்றும் ஜேமி ஓவர்டன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இறுதியில் மும்பை அணி 19 ஓவர்களில் 104 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியைச் சந்தித்தது.
இந்த அபார வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ரன் ரேட்டைப் பெருமளவு உயர்த்தியுள்ளது. ஆட்டநாயகனாக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டார்.
மும்பை அணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலிருந்தே கடும் நெருக்கடியைக் கொடுத்தனர். இப்போட்டியில் சஞ்சு சாம்சன் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
மும்பை அணியின் தொடக்க வீரர்களை அடுத்தடுத்து வீழ்த்திய சென்னை பந்துவீச்சாளர்கள் மும்பை அணியை 11 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழக்கச் செய்தனர்.
இந்த வெற்றியில் சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர்களின் பங்கு அளப்பரியது. மேற்கிந்தியத் தீவுகள் வீரர் அக்கேல் ஹொசைன் தனது 4 ஓவர்களில் வெறும் 17 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவருக்குச் சிறப்பாகத் துணைபுரிந்த நூர் அகமது 2 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை வீரர்களின் பேட்டிங்கைத் தகர்த்தார்.
இந்த பிரம்மாண்ட வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மறுபுறம் மும்பை இந்தியன்ஸ் அணி 8வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்தத் தோல்வி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வான்ஹடே மைதானத்தில் ரன்கள் அடிப்படையில் கிடைத்த மிகப்பெரிய தோல்வியாகும்.
5 முறை ஐபிஎல் சாம்பியன்களாக இந்த இரு அணிகளும் இந்த சீசனில் இதற்கு முன் 6 போட்டிகளில் விளையாடி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கின்றன. அதனால் இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது இரு அணிகளுக்குமே முக்கியமானதாக இருந்தது.
குவின்டன் டி காக் விக்கெட்டை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சவுத்ரியின் தயார் சில தினங்களுக்கு முன்பு இறந்திருந்த நிலையில் சூப்பர் கிங்ஸ் அணி அவருக்கு மரியாதை செய்யும் விதமாக இந்தப் போட்டியில் கருப்புப் பட்டியை அணிந்து விளையாடியது. இப்படியொரு தருணத்தில் சிறப்பாகப் பந்துவீசி சூப்பர் கிங்ஸுக்கு நல்ல தொடக்கம் ஏற்படுத்திக்கொடுத்தார் முகேஷ்.
இந்தப் போட்டிக்காக மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை
கடந்த போட்டியில் காயமடைந்த ஆயுஷ் மாத்ரே இந்தத் தொடரிலிருந்தே விலகியிருக்கிறார். அந்த ஆட்டத்தில் விளையாடியிருந்த மேத்யூ ஷார்ட்டுக்குப் பதிலாக கார்த்திக் ஷர்மா சிஎஸ்கே பிளேயிங் லெவனில் சேர்க்கபப்ட்டிருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அகீல் ஹொசைன் இம்பேக்ட் வீரராகக் களமிறங்கினார்.
ஐபிஎல் தொடரின் ‘எல் கிளாசிகோ’ போட்டியில் 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.
ஐபிஎல் வரலாற்றில் ரன் அடிப்படையில் சூப்பர் கிங்ஸின் மிகப் பெரிய வெற்றி இது. மும்பை இந்தியன்ஸ் அணியின் மிகப் பெரிய தோல்வி இது.
தன்னுடைய இந்த சதம் மூலம் பல்வேறு சாதனைகள் படைத்தார் சாம்சன். மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ஐபிஎல் சதம் அடித்த முதல் சிஎஸ்கே வீரர் இவர்தான். ஒரே சீசனில் 2 சதங்கள் அடிக்கும் முதல் விக்கெட் கீப்பர் இரண்டாவது சிஎஸ்கே வீரர் இவர்தான்.

மேலும் சிஎஸ்கே வரலாற்றில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலிலும் இவர் இடம்பெற்றிருக்கிறார்.
ஷேன் வாட்சன் 43 இன்னிங்ஸ்களில் முரளி விஜய் 70 இன்னிங்ஸ்களில் ருதுராஜ் கெய்க்வாட் 77 இன்னிங்ஸ்களில் 2 சதங்கள் அடித்திருக்கும் நிலையில் சூப்பர் கிங்ஸுக்காக ஏழே இன்னிங்ஸ்களில் 2 சதங்கள் அடித்திருக்கிறார் சாம்சன்.
பேட்டிங் ஒப்ஷன்கள் குறைவாக இருந்ததால் தான் நிலைத்து நிற்கவேண்டியதன் அவசியத்தை சாம்சன் உணர்ந்துகொண்டு நிதானமாக விளையாடினார். அணியின் ரன்ரேட் பெருமளவு வீழாத வகையிலும் ஆடினார்.
இந்தப் போட்டியில் அதிரடியான தொடக்கம் கிடைத்தாலும் சீரான இடைவெளியில் சென்னை சூப்பர் கிங்ஸ் விக்கெட்டுகளை இழந்துகொண்டுதான் இருந்தது.
சாம்சனின் 101 ரன்களுக்கு அடுத்தபடியாக அதிகபட்ச ஸ்கோர் எடுத்தது கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தான். மற்ற வீரர்கள் 22 ரன்கள்ற்கும் குறைவான ரன்னே எடுத்தார்கள்.
இப்படி வேறு யாருமே பெரிய இன்னிங்ஸ் விளையாடாத நிலையில் இன்னொரு முணையில் சாம்சன் நிலைத்து நிற்காமல் இருந்திருந்தால் நிச்சயம் சூப்பர் கிங்ஸ் 200 ரன்களைக் கடந்திருக்காது.

