சர்வதேச மகளிர் தினமாகிய மார்ச் 8ஆம் திகதி கொழும்பில் பெண்களுக்கு மட்டுமான ஒவியப் போட்டி ஒன்றை நடத்த புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி ஏற்பாடு செய்துள்ளது.
இப்போட்டியில் 16 வயதுக்கும் 25வயதுக்கும் உட்பட்ட மகளிர் மட்டும் பங்குபற்ற முடியும். கலந்து கொள்ள விரும்புவோர் 0754880172 என்ற வட்சப் இலக்கத்தில் தொடர்பு கொண்டுமேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
குறிப்பாக க.பொ.த உயர்தரத்தில் கல்விபயிலும் மாணவிகளுக்குமுன்னுரிமை வழங்கப்ப டும் எனவும் அறிவிக்கப்படுகின்றது
முதல் பரிசாக ரூபா 5000, இரண்டாம் பரிசாக ரூபா 3000 , மூன்றாம் பரிசாக ரூபா2000 , சான்றிதம் என்பன வழங்கப்படும்.
மேலும் 10 ஓவியங்களுக்கு பரிசும் சான்றிதழும் வழங்கப்படும். இதற்கான விருதுகள் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் திகதி நடைபெறும் கலாமித்ரா ஸ்தாபக விழாவில் வழங்கப்படும்.
Trending
- அதிவேக வீதிகளில் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்
- ரணிலுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு