Friday, November 27, 2026 4:20 pm
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, டிசம்பர் 3 ஆம் திகதி மாற்றுத்திறனாளிகள் மெட்ரோ பஸ்களில் கட்டணமின்றிப் பயணம் செய்யலாம் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று வெள்ளிக்கிழமை (27) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசப் போக்குவரத்து வசதியை வழங்குமாறு ‘லங்கா மெட்ரோ டிரான்சிட் (பிரைவேட்) லிமிடெட்’ (LMT) நிறுவனத்திடம் முன்னதாகக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக அமைச்சர் தெரிவித்தார்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்வது குறித்த நிறுவனத்தின் முடிவை, அதன் தலைவர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

