Thursday, November 26, 2026 5:11 pm
செல்லுபடியாகும் விஸா இன்றி இலங்கையில் தங்கியிருந்ததாகத் தன் மீதான குற்றச்சாட்டை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே, இன்று வியாழக்கிழமை (26) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, டயானா கமகே சார்பில் ஆஜரான சட்டத்தரணி மோகன் செனவிரத்ன, தனது கட்சிக்காரர் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொள்வதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

