Thursday, November 26, 2026 4:53 pm
புதுமை சார்ந்த பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது பள்ளிகளிலிருந்தே தொடங்க வேண்டும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இதற்காக, மாணவர்கள் தாங்கள் உருவாக்கிய படைப்புகளைக் காட்சிப்படுத்தவும், அவற்றை விளம்பரப்படுத்தி விற்பனை செய்வதில் நடைமுறை அனுபவத்தைப் பெறவும் உதவும் ஒரு முன்மாதிரி சந்தையை (model marketplace) உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் அறிவித்தார்.
தேசிய வணிக முகாமைத்துவ நிறுவனத்தின் (NIBM) 50-வது ஆண்டு நிறைவு விழாவின் ஒரு பகுதியாக, நேற்று (25) கொழும்பில் நடைபெற்ற ‘சிறந்த புத்தாக்க வணிக மாதிரி விருதுகள்’ (BIBMA) 2026 விழாவில் பேசும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
2027-ஆம் ஆண்டு முதல் 6-ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் தொழில்முனைவு ,நிதி அறிவு (financial literacy) ஆகியவற்றை அறிமுகப்படுத்தவும், 2026 முதல் 2028 வரை மூன்று கட்டங்களாக அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒருநிலையம் வீதம் மொத்தம் 100 செயல்பாடு சார்ந்த வணிகக் கற்றல் மையங்களை நிறுவவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்று என மொத்தம் 25 மையங்கள் அமைக்கப்படும் என்றார்.

