Thursday, November 19, 2026 5:15 pm
கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு இன்று வியாழக்கிழமை[19] காலமானார். சட்டசபை தேர்தலில் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை தோற்கடித்ததால் தமிழகம் முழுவதும் பாபு . உடல்நலக் குறைவால் செப்டம்பர் 9 ம் திகதி சென்னை அம்பத்தூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குறித்து அவ்வபோது அறிக்கை வெளியிடப்பட்டன. முதல்வர் விஜய், அமைச்சர்கள் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. குழப்பமான சூழல் நிலவுகிறது. இதனால், அவரின் உடல்நிலை குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் எனக்கோரி கொளத்தூர் தொகுதியை சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் வி.எஸ்.பாபு இன்று(நவம்பர் 19) பிற்பகல் 2:24 மணிக்கு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் காலமானார்.

