Thursday, November 19, 2026 3:13 pm
2035ம் ஆண்டில் கிறிஸ்தவ மதத்தைப் பின்னுக்குத் தள்ளி, உலகின் மிகப்பெரிய மதமாக இஸ்லாம் உருவெடுக்கும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.கடந்த 25 ஆண்டுகளாக உலகின் மத ரீதியான மக்கள்தொகை மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்து வரும், அமெரிக்காவி
அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2020ம் ஆண்டு நிலவரப்படி, உலகில் 227 கோடி கிறிஸ்தவர்களும், 202 கோடி முஸ்லிம்களும் இருந்தனர். தற்போது இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய இரு மதங்களுமே வளர்ச்சியடைந்து வந்தாலும், இஸ்லாமியர்களின் மக்கள்தொகை மிக வேகமாக அதிகரித்து வருகிறது.
2035ம் ஆண்டில், உலகில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 257 கோடியாகவும், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 252 கோடியாகவும் இருக்கும். 2070ம் ஆண்டில், உலக அளவில் முஸ்லிம்கள் 360 கோடியைத் தாண்டுவார்கள் என்றும், கிறிஸ்தவர்கள் 300 கோடிக்கும் சற்று குறைவாக இருப்பார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
மதமாற்றத்தை விட, பிறப்பு விகிதமே இந்த மாற்றத்திற்கு முக்கியக் காரணமாக உள்ளது. 2020 – 2025 காலகட்டத்தில் முஸ்லிம் பெண்களின் கருவுறுதல் விகிதம் 3.1 ஆகவும், கிறிஸ்தவப் பெண்களுக்கு 2.5 ஆகவும் உள்ளது. பிற மதத்தவருக்கு இது 1.6 ஆக மட்டுமே உள்ளது.
2070ம் ஆண்டில், உலகிலேயே அதிக முஸ்லிம்கள் வாழும் நாடாக பாகிஸ்தான் முதலிடத்தைப் பிடிக்கும். அதனைத் தொடர்ந்து இந்தியா, நைஜீரியா , இந்தோனேசியா ஆகிய நாடுகள் இருக்கும். அமெரிக்காவில் 2065ம் ஆண்டுக்குள் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் கீழ் குறையும். கனடாவில் 2030-லேயே இந்த நிலை ஏற்படும்.
சகாரா பாலைவனத்திற்கு தெற்கே உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் மக்கள்தொகை வேகமாக அதிகரிப்பதால், 2070ல் உலகின் பாதிக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் ஆப்பிரிக்காவிலேயே வசிப்பார்கள். இந்து , யூத மதத்தவரின் எண்ணிக்கை அதிகரித்தாலும், உலக மக்கள்தொகை சதவீதத்தில் அவர்களின் பங்கு சற்று குறையும். சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் மக்கள்தொகை குறைவதால் புத்த மதத்தவரின் எண்ணிக்கையும் சரியும்.
அதேநேரம், எந்த மதத்தையும் சாராதவர்களின் எண்ணிக்கையும் உலக அளவில் கணிசமாக அதிகரித்து வருகிறது என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

