Thursday, November 19, 2026 5:41 pm
‘ஏர்பஸ்’ (Airbus) விவகாரம் தொடர்பான வழக்கில், இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தின் விசேட அமர்வு (Trial-at-Bar) முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட இலங்கை பொதுஜன முன்னணியின் (SLPP) தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, டிசம்பர் 2-ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதன்போது, சர்ச்சைக்குரிய ‘ஏர்பஸ்’ ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகை அவரிடம் கையளிக்கப்பட்டது. பிணை வழங்குவதற்கு அவசியமான எவ்வித சிறப்புச் சூழலும் முன்வைக்கப்படாததால், பிரதிவாதியான நாமல் ராஜபக்ஷவைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு டிசம்பர் 2-ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உத்தரவிடப்பட்டது. தற்போது விளக்கமறியலில் இருக்கும் நாமல் ராஜபக்ஷ, சர்ச்சைக்குரிய ‘ஏர்பஸ்’ ஒப்பந்தம் தொடர்பான வழக்கிற்காக இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தின் விசேட அமர்வு முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ (SriLankan Airlines) நிறுவனம் ‘ஏர்பஸ்’ ரக விமானங்களை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நாமல் ராஜபக்ஷ மற்றும் மேலும் சிலருக்கு எதிராக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளது.

