Thursday, November 19, 2026 2:45 pm
இலங்கையின் 79வது தேசிய சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கான முதல் ஆயத்தக் கூட்டம், பிரதமர் ஹரினி அமரசூரியவின் தலைமையில் புதன்கிழமை (18) அலரி மாளிகையில் நடைபெற்றது.
2027 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி நடைபெறவுள்ள தேசிய கொண்டாட்டங்களுக்கான முக்கிய ஏற்பாடுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது. அதிகாரப்பூர்வ கருப்பொருள், அமைப்பு ரீதியான ஏற்பாடுகள், நிகழ்ச்சி நிரல் ,ம் மத அனுசரிப்புகள் உள்ளிட்ட கொண்டாட்டங்களின் பல்வேறு அம்சங்களை மையமாகக் கொண்டு கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
பிரதான தேசிய சுதந்திர தின விழா கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெறும் என்றும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இந்த சந்திப்பில் அமைச்சர்களான ஹினிதும சுனில் செனவி, வசந்த சமரசிங்க, சந்தன அபேரத்ன , சமந்த வித்யாரத்ன, பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

