Thursday, November 5, 2026 8:19 pm
எபோலா நோயால் பாதிக்கப்பட்ட பிரிட்டிஷ் சுகாதாரப் பணியாளர் ஒருவர், மருத்துவ சிகிச்சைக்காக காங்கோ ஜனநாயகக் குடியரசிலிருந்து இங்கிலாந்துக்கு அழைத்துச் செலப்படுகிறார் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
“தற்போது காங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள ஒரு பிரிட்டிஷ் குடிமகனுக்கு எபோலா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது ,” என்று இங்கிலாந்து அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
அடையாளம் தெரியாத அந்த நோயாளி, சீரான நிலையில் இருப்பதாகவும், புதன் அல்லது வியாழக்கிழமையன்று இங்கிலாந்துக்கு வந்து சேர்வார் எனவும், பின்னர் சிறப்பு அம்புலன்ஸ் மூலம் ‘கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய’ தொற்றுநோய் சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்படுவார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

