Thursday, October 29, 2026 7:56 pm
இஸ்ரேல் பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 89.8 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், நெதன்யாகு 53 இடங்களையும், காடி ஐசென்கோட் தலைமையிலான எதிர்க்கட்சி 48 இடங்களையும் கைப்பற்ற கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 120 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்குத் தேவையான 61 இடங்கள் கிடைக்காமல் தொங்கு நிலை உருவாகியுள்ளது.
அரபு-தலைமையிலான கட்சிகள் வரலாற்றுச் சாதனையாக 19 இடங்களில் வெற்றி பெற்று ‘கிங்மேக்கர்’ நிலையை அடைந்துள்ளன. நெதன்யாகு அரபுக் கட்சிகளுடனான கூட்டணியைத் கடுமையாக எதிர்த்துள்ள நிலையில், எதிர்க்கட்சியான ஐசென்கோட் சில நிபந்தனைகளுடன் அவர்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளார். இதனால் நெதன்யாகுவை ஆட்சியிலிருந்து அகற்ற எதிர்க்கட்சிகள் அரபுக் கட்சிகளுடன் கைகோர்க்க வாய்ப்புள்ளது. தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கக் கூடிய சுமார் 5 இலட்சம் தபால் வாக்குகளும், இராணுவ வாக்குகளும் நிலுவையில் உள்ளது.
வாக்குப்பதிவு 78 சதவீதமாக உயர்ந்த நிலையில், இறுதி முடிவு சான்றிதழ் நவம்பர் 4-க்குள் வெளியிடப்பட வேண்டும். பெரும்பான்மை அரசு அமையாவிட்டால் மீண்டும் தேர்தல் நடத்தப்படலாம் அல்லது சிறுபான்மை அரசுக்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன.

