Thursday, October 29, 2026 8:09 pm
, உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த ‘சென்ட்ரம் ஏர்’ (Centrum Air) நிறுவனம், தாஷ்கண்ட் , மத்தல ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்திற்கு இடையே நேரடி விமான சேவைகளைத் தொடங்கியுள்ளது என துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சசு தெரிவித்துள்ளது.
இந்த புதிய விமானப் பாதை, இலங்கைக்கும் மத்திய ஆசியாவிற்கும் இடையிலான விமான இணைப்பை விரிவுபடுத்துவதுடன், இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு கூடுதல் வாய்ப்புகளை உருவாக்குகிறது.
இந்தத் திட்டமிடப்பட்ட விமான சேவை, இலங்கையின் 2026–2027 சுற்றுலாப் பருவத்தில் வாரத்திற்கு இருமுறை, அதாவது புதன் சனி ஆகிய கிழமைகளில் இயக்கப்படும்.
இந்தச் சேவையின் தொடக்கம் சுற்றுலா வளர்ச்சையை ஊக்குவிப்பதோடு, பயணிகள் போக்குவரத்தை மேம்படுத்தி, இலங்கைக்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

