Thursday, October 29, 2026 8:20 pm
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து,பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு நாளை வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 30) ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளது.
அரச பல்கலைக்கழகங்களில் நிலவும் கல்விசார் பணியாளர் பற்றாக்குறை, அதிக பணிச்சுமை மற்றும் போதிய பௌதிக வசதிகள் இன்மை ஆகிய காரணங்களினாலேயே இந்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக, FUTA-வின் பொதுச் செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க தெரிவித்தார்.
அரச பல்கலைக்கழக அமைப்பு எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், இந்த வேலைநிறுத்தப் போராட்டத்துடன் இணைந்து எதிர்ப்புப் பேரணி ஒன்றையும் நடத்த பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்புதிட்டமிட்டுள்ளது.

