Tuesday, September 29, 2026 4:42 pm
சென்னை கோடம்பாக்கத்தில் ரஜினிக்கு சொந்தமான ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபம் இருக்கிறது. 1989ம் வருடம் இந்த திருமண மண்டபம் திறக்கப்பட்டது. அப்போதிலிருந்து ரஜினி தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திப்பது, நண்பர்களை சந்திப்பது, ரசிகர் மன்ற பணிகள் தொடர்பாக ஆலோசனை செய்வது என ரஜினிக்கு எல்லாமே இங்குதான். இந்த மண்டபத்தில்தான் அரசியலுக்கு வருகிறேன் என ரசிகர்கள் முன்னிலையில் ரஜினி அறிவித்தார்.
இந்நிலையில், ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபம் உள்ள இடத்தில் மூன்று நட்சத்திர ஹோட்டல் வரவிருப்பதாக செய்திகள் பரவி வருகிறது. மண்டபத்தை இடித்துவிட்டு ரஜினியே ஹோட்டல் கட்டப்போகிறாரா இல்லை வேறு ஒரு நிறுவனம் கட்டப்போகிறாதா? இல்லை இந்த செய்தியே உண்மையில்லையா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

