Friday, November 13, 2026 4:55 pm
அனுராதபுரம், ரம்பேவாவில் மூன்று பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் உயிரிழந்த இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் சாரதி , விபத்தின் போது கஞ்சா ,மது அருந்தியிருந்ததாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளும் மருத்துவப் பரிசோதனைகளும் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில், அவர் கஞ்சா , மது ஆகிய இரண்டையும் உட்கொண்டிருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நவம்பர் 10 ஆம் திகதி , கண்டி – யாழ்ப்பாணம் (A9) வீதியில், ரம்பேவாவில் உள்ள வெலி ஓயா சந்திப்புக்கு அருகில் இடம்பெற்றது.
இந்த விபத்தில் இலங்கை போக்கு வரத்து பஸ் சாரதி , இரு பெண்கள் உட்பட நால்வர் உயிரிழந்தனர். மேலும், 76 பயணிகள் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
ஜனகாபுராவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இபோச பஸ் ஒன்றும், அக்கரைப்பற்றிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற இபோச பஸ்ஸும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதன் விளைவாக இந்த விபத்து ஏற்பட்டது.
வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று, கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த பஸ்ஸின் பின்புறத்தில் மோதியதால், மொத்தம் மூன்று பஸ்கள் விபத்துக்குள்ளாயின்

