Monday, September 28, 2026 4:10 pm
போலியான இராஜதந்திர கடவுச்சீட்டை (diplomatic passport) வைத்திருந்த குற்றத்திற்காகத் தண்டனை விதிக்கப்பட்ட சஷி வீரவன்ச தொடர்பான வழக்கு, அக்டோபர் 12 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சஷி வீரவன்ச, இன்று திங்கட்கிழமை (28) கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் ஆஜரானார்.
அவருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும், இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டது.உயர் நீதிமன்றத்தின் தொடர்புடைய வழக்கு ஆவணங்கள் அல்லது பதிவுகள் சமர்ப்பிக்கப்படாததால், அவற்றைச் சமர்ப்பிக்க அவகாசம் வழங்கிய நீதவான், வழக்கின் விசாரணையை ஒக்டோபர் 12 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.

