Sunday, September 20, 2026 12:51 pm
ந்ந்வலப்பிட்டியில் இன்று ஞாயிற்றுக்கிழமை(20) பெய்த பலத்த மழை வெள்ளத்தால் மகாவலி ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்ததன் காரணமாக, நாவலப்பிட்டியின் தாழ்வான பகுதிகளில் உள்ள பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
பாஸ்பாகே கோரலே (Pasbage Korale) பிரதேச செயலகப் பிரிவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் சுமார் 100 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நீர்மட்டம் உயர்வால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிதுல்கோட்டே, லாபுவெல்கொட்டுவ மற்றும் ஜயசுந்தர ஓவிட்டா ஆகிய பகுதிகள் அடங்கும்.

