Sunday, September 20, 2026 12:34 pm
உலகக் கிண்ணத்தை வென்ற ஸ்பெய்ன் அணியின் பயிற்சியாளர் லூயிஸ் டி லா ஃபுவென்டே , 2032 வரை அப்பதவியில் நீடிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளதாக ஸ்பானிஷ் உதைபந்தாட்ட கூட்டமைப்பின் தலைவர் ரவுல் லூசான் புதன்கிழமை அறிவித்தார்.
இந்த ஒப்பந்த நீடிப்பு, 2030 உலகக் கிண்ணதொ தொடர் வரை டி லா ஃபுவென்டே ஸ்பெயின் அணியை வழிநடத்துவதை உறுதி செய்கிறது.2030 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகளை ஸ்பெய்ன், போத்துகல், மொராக்கோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன; சில போட்டிகள் லத்தீன் அமெரிக்காவிலும் நடைபெறவுள்ளன.
‘உலக உதைபந்தாட்ட உச்சி மாநாட்டில்’ (World Football Summit) பேசிய லூசான், டி லா ஃபுவென்டேவின் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கான முடிவு அவரது செயல்பாடுகள், பணி மற்றும் பரவலான பொதுமக்களின் ஆதரவு ஆகியவற்றின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாகக் கூறினார். அவரது தற்போதைய ஒப்பந்தம் ‘யூரோ 2028’ போட்டிக்குப் பிறகும் நீடிக்கும் வகையில் இது அமைந்துள்ளது.
ஸ்பெய்ன்னின் 21 வயதுக்குட்பட்டோர் (U21) அணியின் முன்னாள் பயிற்சியாளரான டி லா ஃபுவென்டே, 2022 உலகக் கிண்ணத்துக்குப் பின்னர் பிறகு லூயிஸ் என்ரிக்கேவுக்குப் பதிலாகப் பொறுப்பேற்றார். இவர் ஸ்பெயின் அணியை 2023 யூஈஎஃப்ஏ (UEFA) நேஷன்ஸ் லீக், யூரோ 2024, இந்த கோடையில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டி ஆகியவற்றில் வெற்றிபெறச் செய்தார்; உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆர்ஜென்ரீனாவை ஸ்பெய்ன் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
“அவரது ஒப்பந்தத்தை நீட்டிக்க நான் முன்வந்துள்ளேன்; ஏனெனில் ஊதிய அடிப்படையில் அவர் சிறந்த 10 பயிற்சியாளர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை, ஆனால் இனி அவர் அந்தப் பட்டியலில் இருப்பார்,” என்று லூசான் கூறினார். “அவர் இன்னும் பல ஆண்டுகள் எங்களுடன் இருக்கும் வகையில் ஒப்பந்தத்தை இறுதி செய்து வருகிறோம். அவர் 14 ஆண்டுகளாக எங்களுடன் இருக்கிறார், அவர் தனது பயிற்சியாளர் பணிவாழ்வை இங்கேயே நிறைவு செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.”

