Wednesday, August 12, 2026 8:44 pm
யானையை இலங்கையின் தேசிய விலங்காக அங்கீகரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலக யானைகள் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட செய்தியில், யானைகள் இலங்கையின் பாரம்பரியம் மற்றும் அடையாளத்தின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும் என்று பிரேமதாச கூறினார்.
யானைகள்,அவற்றுடன் வாழும் சமூகங்கள் ஆகிய இரண்டையும் பாதுகாக்க வேண்டும் என்றும், சகவாழ்வு ஒரு தேசிய அர்ப்பணிப்பாக மாற வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
“இலங்கை யானையை நமது தேசிய விலங்காக அங்கீகரிப்போம்,” என்று பிரேமதாச கூறினார்.

