Wednesday, July 29, 2026 11:20 am
பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது பணி ஆயுதத்தால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். பாணந்துர-வலன ஊழல் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இன்று அதிகாலை (29) பொலிஸ் நிலையத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் அவர் தனது T-56 தாக்குதல் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார்.
துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த அவர், பாணந்துர ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பேராதனைப் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரிவந்துள்ளது.

