Wednesday, July 29, 2026 10:57 am
தென்மேற்கு ஜப்பானைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று (28) ரிக்டர் அளவில் 7.1 ஆகப் பதிவான நிலநடுக்கமே இவ்வாறு இடம்பெற்றிருந்தது.
நிலநடுக்கம் காரணமாக வீடுகள் மற்றும் வர்த்தக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்களுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது 10 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஜப்பானின் மூன்றாவது பெரிய தீவாகக் கருதப்படும் கியூஷூ (Kyushu) தீவிலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

