Tuesday, July 28, 2026 10:20 am
தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் , அதனை கட்டுப்படுத்த கோரியும் நயினாதீவு கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
நயினாதீவுக்கும் குறிகாட்டுவனுக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் எதிர்வரும் (29.07.2020) புதன்கிழமை காலை 09 மணியளவில் குறித்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக நயினாதீவு கடற்தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இந்திய படகுகள் தொடர்ச்சியாக மனிதாபிமானமற்ற முறையில் எல்லை தாண்டி கடல் வளக் கொள்ளையில் ஈடுபடுவதுடன், அவற்றால் வடக்கு கடற்தொழிலாளர்களின் பல கோடி ரூபாய் பெறுமதியான வலைகள் மற்றும் கடற்தொழில் உபகரணங்கள் சேதமாக்கப்படுகின்றன.
அதனால் வடக்கு மீனவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்திய இழுவை படகுகளைக் கட்டுப்படுத்தக் கோரி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிட்டிருந்தனர்.
வடக்கு மீனவ சங்க பிரதிநிதிகள், கடற்றொழில் சங்கங்களின் சாமாச பிரதிநிதிகள், கடற்றொழிலாளர்கள் இணையம், வடமாகாண பிரதிநிதிகள், ஏனைய கடற்றொழிலாளர் நலன் சார்ந்த அமைப்புக்களின் பிரதிநிதிகள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் கலந்து வலுசேர்க்க , குறிகட்டுவான் பகுதியில் ஒன்று சேர வேண்டும் என நயினாதீவு கடற்தொழிலாளர்கள் சங்கத்தினர் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

