Monday, July 20, 2026 11:36 am
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகோற்சவப் பொருவிழா நேற்றைய தினம் (19) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
முருகப்பொருமானுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்று, மூர்த்திகளுக்கு வசந்த மண்டப பூசைகள் நடைபெற்று , விநாயகப் பெருமான் சிவன் உமாதேவியார் சமேதராயும் மற்றும் முருகப் பெருமான் வள்ளி தெய்வானை சமேதராயும் வசந்த மண்டபத்திலிருந்து எழுந்தருளி கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.
மாவை கந்தனின் வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் தேர்த் திருவிழா எதிர்வரும் 11ம் திகதியும் , எதிர்வரும் 12ம் திகதி ஆடி அமாவாசை தினத்தன்று கீரிமலை புனித தீர்த்தத்தில் தீர்த்த உற்சவம் சிறப்பாக நடைபெற உள்ளது.
நாட்டின் பல பாகங்களில் இருந்தும் புலம்பெயர் தேசங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மாவை கந்தனின் கொடியேற்றத் திருவிழாவில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

