Friday, July 17, 2026 12:11 pm
முன்னாள் பொலிஸ் மாஅதிபர் சி.டி. விக்ரமரத்ன துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு உயிர்மாய்ப்பு செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1986ம் ஆண்டு உதவி பயிற்சி பொலிஸ் அத்தியட்சகராக பொலிஸ் சேவையில் இணைந்துகொண்ட சி.டி.விக்ரமரத்ன் 34 வருடங்களுக்கும் அதிக காலம் பொலிஸ் சேவையில் ஈடுபட்டிருந்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தையடுத்து பொலிஸ் மா அதிபராக இருந்த பூஜித் ஜயசுந்தர கட்டாய விடுமுறையில் அனுப்பட்ட நிலையில் பதில் பொலிஸ் மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

