Friday, July 17, 2026 12:16 pm
பராசைலிங் என்பது ஒரு சாகச நீர் விளையாட்டு. இதில் ஒருவர் பரசூட் போன்ற பிரத்தியோகமான கேனப்பி எனப்படும் சிறகுடன் கயிறு மூலம் இணைக்கப்பட்டு அதிவேக மோட்டார் படகு அல்லது வாகனத்தால் இழுக்கப்பட்டு காற்றில் பறக்கவிடப்படுவார். பாதுகாப்பு கவசம் அணிந்து பரசூட்டுடன் இணைக்கப்படும்.
உங்களை இழுக்கும் மோட்டார் படகு வேகமாக நகரும்போது காற்றின் விசை , வேகம் காரணமாக பரசூட் மேலே இயங்கும். கடலுக்கு மேலே நாம் பறந்து மேலிருந்து கடற்கரை கடலின் அழகு போன்றவற்றை ரசிக்க முடியும்.
பராசைலிங் செய்யும்போது நான் எதையும் செய்ய வேண்டியது இல்லை. பயிற்சி பெற்ற தொழில் முறை உதவியாளர்கள், பாதுகாப்பு உபரண உபகாரங்களுடன் அது இயக்கப்படும்.
அதேநேரம் தாய்லாந்து உள்ளிட்ட பல வெளிநாடுகளில் இந்த விளையாட்டு அதிக அளவு விளையாடப்படுகிறது. அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு தொழிதிபர் தாய்லாந்து சென்று அங்கு அவர் பராசைலிங் செய்யும் போது அதை அவரின் மனைவி வீடியோ எடுத்தார். அப்போது அவர தரையிலிருந்து மேலே பறந்து சென்ற சிறிது நேரத்தில் மேலேயிருந்து அவர் கீழே விழுந்துவிட்டார். இது அனைத்தும் மனைவி எடுத்த வீடியோவில் பதிவாகியிருக்கிறது. இந்த விபத்தில் அவர் இறந்துவிட்டதாக தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

