Wednesday, July 15, 2026 4:08 pm
தொடர் ஒத்திவைப்புகளுக்குப் பின்னர் நடிகர் விஜய்யின் இறுதிப் படமான ‘ஜனநாயகன்’ வெளியீட்டுத் திகதி வெளியாகியுள்ளது.
ஜூலை 23 அன்று இப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவில் முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது.
கேவிஎன் புரொடக்ஷன்ஸ் இப்படத்தின் வெளியீட்டு திகதியை அறிவித்துள்ளது. மத்திய திரைப்படச் சான்றளிப்பு வாரியத்துடனான சான்றளிப்புச் சிக்கல்கள் காரணமாக இத்திரைப்படத்தின் வெளியீடு பல மாதங்களாக முடங்கியிருந்தது.


