Friday, October 23, 2026 4:35 pm
பாராளுமன்ற உறுப்பினர் சமர சம்பத் தசநாயக்க , அவரது தனிப்பட்ட செயலாளர் ஆகியோருக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள இலஞ்ச வழக்கு தொடர்பான பிணை விண்ணப்பங்களை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேக நபர்கள் தரப்பு வழக்கறிஞர்களின் சமர்ப்பணங்களைக் கேட்டறிந்த கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம், குறித்த இரு சந்தேக நபர்களையும் நவம்பர் 6-ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

