Friday, October 23, 2026 4:50 pm
விளக்கமறியலில் இருக்கும் தனது மகனும், இலங்கை பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கு தகப்பனான மகிந்த ராஜபக்ஷ, தற்போது எழுதிய கடிதத்தில், நீதித்துறையின் மீது நம்பிக்கை வைக்குமாறும், அரசியல் ரீதியான பழிவாங்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தனது அரசியல் அனுபவங்களை நினைவுபடுத்திய மகிந்த, பெற்றோரின் செயல்களுக்குப் பிள்ளைகளைப் பொறுப்பாக்கக் கூடாது என்றும், தனது ஆட்சிக்காலத்தில் வேலைவாய்ப்புகளைப் பெற்றவர்களைக் குறிவைக்க வேண்டாம் என்றும் தனது மகனுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
எதிர்காலத்தில் நாமல் அதிகாரத்திற்கு வரும் பட்சத்தில், பழிவாங்கும் செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்றும், இதுவே ராஜபக்ஷ குடும்பத்தின் மரபு என்றும் அவர் அறிவிறுத்தியுள்ளார்.

