Monday, July 6, 2026 6:57 am
அமெரிக்கா,கனடா,மெக்ஸிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் உலகக்கிண்ணப் போட்டியை4.64 மில்லியன் ரசிகர்கள் பார்வையிட்டதாக பீபா அறிவித்துள்ளது.
உலகக்கிண்ணப் போட்டியின் முதல் சுற்று முடிவடைந்ததைத் தொடர்ந்து பீபா வெளியிட்ட அறிகையில் 72 குழுநிலைப் போட்டிகளிலும் சேர்த்து 4,644,549 பார்வையாளர்கள் வருகை தந்ததாகவும், இது போட்டியின் இந்த நிலையில் வருகைக்கான ஒரு புதிய சாதனை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியுடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட பத்து லட்சம் ரசிகர்களின் அதிகரிப்பைக் குறிக்கிறது. அந்தப் போட்டியில் குழுநிலைப் போட்டிகளுக்கு மொத்தமாக 3,587,538 பார்வையாளர்கள் வருகை தந்திருந்தனர்.

