Thursday, July 2, 2026 12:11 pm
நியூயோர்க்கின் ‘எம்பயர் ஸ்டேட்’ கட்டிடத்தின் உச்சிப் பகுதிக்கு ஏறி திருமண விருப்ப முன்மொழிவு செய்த ரஷ்யத் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
இருவர்களது திருமணத்திற்கான விருப்பத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்த இந்தச் சாகச நிகழ்வு சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.
ஏஞ்சலா நிகோலாவ் மற்றும் வான்யா பீர்கஸ் ஆகியோர் குறித்த கட்டிடத்தின் ஆண்டெனா பகுதிக்குச் சென்று அங்கு ஒருவருக்கொருவர் திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டு அதைக் கொண்டாடினர்.
தரைமட்டத்திலிருந்து 1454 அடி உயரத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு 2024ல் வெளியான Skywalkers : A Love Story என்ற ஆவணப்படத்தில் இடம்பெற்றிருப்பதுடன் இவர்கள் இருவருமே அத் திரைப் படத்தில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

