Saturday, October 24, 2026 5:30 pm
பொதுமக்களுக்கு பொருளாதார நிவாரணம் கிடைப்பதற்கும், நாட்டின் கலாசார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும் உதவுமென்றால், 500 நாட்கள் வரை சிறையில் இருக்கத் தயார் என்று இலங்கை பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ஷ,தெரிவித்துள்ளார்.
தனது சிறைவாசத்தின் 50-வது நாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், வாழ்க்கைச் செலவு விவகாரம் குறித்து அரசாங்கத்தைக் கடுமையாகச் சாடியுள்ள ராஜபக்ஷ, நாட்டின் நிதி நிலைமை குறித்து அரசாங்கம் பல்வேறு கூற்றுகளை முன்வைத்த போதிலும், பொதுமக்களுக்கு எவ்வித நிவாரணமும் கிடைக்கவில்லை
மின்சாரக் கட்டணங்கள் , எரிபொருள் விலைகள் ஆகியவற்றைக் குறைத்தல், ஊதிய உயர்வு, வட்டி இல்லாக் கடன்கள் ,அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைத்தல் போன்ற பலன்கள் கிடைக்க வேண்டும். இறுதியில் நீதிமன்றம் என்னை நிரபராதி என விடுவிக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது.

