Thursday, July 2, 2026 11:36 am
தெல்லிப்பனை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசிற்கு எடுப்பது என்பது ஒரு சட்டவிரோதமான செயல்பாடு என இலங்கை தமிழரசு கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது மாகாண சபைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மத்திய அரசாங்கம் பறித்துக்கொள்வதாக தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த 27ம் திகதி சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது தற்போது வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.

