Saturday, June 27, 2026 8:48 pm
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுவரை இப்பதவியில் நீடித்து வந்த செல்வப்பெருந்தகை திடீரென மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக டெல்லி மேலிடத்திற்கு மிகவும் நெருக்கமானவரான மாணிக்கம் தாகூர் இந்த முக்கியப் பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்தத் திடீர் தலைமை மாற்றம் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், தமிழகத்தில் கட்சியைப் பலப்படுத்தவும், உட்கட்சிப் பூசல்களைச் சரிசெய்யவும் இந்த அதிரடி முடிவை டெல்லி மேலிடம் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நீண்ட காலமாக அகில இந்திய அளவில் கட்சியின் பல்வேறு முக்கியப் பொறுப்புகளையும், பிற மாநிலங்களின் தேர்தல் பொறுப்பாளர்களாகவும் திறம்படச் செயல்பட்ட அனுபவம் கொண்ட மாணிக்கம் தாகூரின் நியமனம், தமிழக காங்கிரஸில் ஒரு புதிய அரசியல் அத்தியாயத்தைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

