Friday, June 19, 2026 3:20 pm
இலங்கையின் பொதுப் போக்குவரத்துத் துறையை வலுப்படுத்தும் நோக்கில் 104 மெட்ரோ பஸ்கள் நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்த பஸ்கள் கையளிக்கப்படும் விசேட நிகழ்வு சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள FOTON நிறுவனத்தில் நடைபெற்றது. இதில் ‘லங்கா மெட்ரோ டிரான்சிட்’ நிறுவனத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

நாடு முழுவதும் நவீன பாதுகாப்பான மற்றும் வசதியான பொதுப் போக்குவரத்துச் சேவைகளை மேம்படுத்துவதில் இந்த பஸ்கள் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்வு இலங்கையின் பொதுப் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சியில் மற்றுமொரு முக்கிய மைல்கல் ஆகும்.

