Friday, June 19, 2026 11:15 am
பருத்தித்துறை – கிராமக்கோட்டடி சந்தியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் விபத்தை ஏற்படுத்திய இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பியோடியுள்ளனர்.
குறித்த விபத்து நேற்று மாலை 6.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது. மந்திகை பகுதியில் இருந்து அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறையில் இருந்து மந்திகை நோக்கி மோட்டார் சைக்கிலில் பயணித்துக்கொண்டிருந்த பெண் கிராமக்கோட்டடி சந்தியை கடந்து செல்ல முற்பட்ட போது எதிர்பக்கமிருந்து மோட்டார் சைக்கிலில் அதி வேகமாக வந்த இளைஞர்கள் அவரை மோதித்தள்ளிவிட்டு தப்பியோடி உள்ளனர்.
இவ் விபத்தில் தூக்கி வீசப்பட்ட குறித்த பெண்ணின் கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.
பருத்தித்துறை போக்குவரத்து பொலிசார் விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அத்துடன் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கமராக்களை ஆய்வு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற இருவரை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

