Tuesday, June 16, 2026 1:50 pm
அதிவேகமாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை , கரோலினா பகுதியில் நேற்று (15) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பிரதான வீதியை விட்டு விலகி செங்குத்தான சரிவு ஒன்றில் சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தலவாக்கலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போதே , சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து இடம் பெற்றபோது , வெளிநாட்டிலிருந்து வருகை தந்த நபர் ஒருவரும் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளார். இந்த விபத்தினால் முச்சக்கரவண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன் , காயமடைந்த சாரதி உடனடியாக வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

