Monday, June 15, 2026 12:31 pm
அமெரிக்க டொலருக்கு நிகராக வீழ்ச்சியடைந்து வந்த இலங்கை ரூபாய் , இன்று (15) மீண்டும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அதன்படி , இன்று அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 326.34 ரூபாயாகவும், அதன் விற்பனை விலை 336.58 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (12) அன்று அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 331.42 ரூபாயாகவும் , அதன் விற்பனை விலை 341.36 ரூபாயாகவும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

