Monday, June 15, 2026 11:42 am
யாழ்ப்பாணம் , பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோலி தெற்கு பகுதியில் காணாமல் போயிருந்த சிறுவன் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பத்தினரால் சிறுவன் காணவில்லை என பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து , பருத்தித்துறை பொலிஸார் உடனடியாக விசாரணைகளையும் தேடுதல் நடவடிக்கைகளையும் ஆரம்பித்தனர் . தொடர்ந்து மேற்கொண்ட தேடுதலின் போது , சிறுவனின் வீட்டிற்கு அருகில் அமைந்திருந்த கிணறு ஒன்றிலிருந்து அவரது சடலம் மீட்கப்பட்டது . உயிரிழந்தவர் 6 வயதுடைய சிறுவன் என்பது ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

